தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக தனக்கென தனி ஸ்டைலில் கலக்கலான படங்கள் நடித்து வரும் நடிகர் RJபாலாஜி நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை இயக்கியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ளார். 

முன்னதாக பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் RJபாலாஜி நடித்துள்ள திரைப்படம் ரன் பேபி ரன். RJபாலாஜி உடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் & விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவில், மதன் கணேஷ் படத்தொகுப்பு செய்ய, சாம்.CS இசையமைத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ரன் பேபி ரன் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதத்தில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

நடிகர் RJபாலாஜியின் திரைபயணத்தில் இதுவரை இல்லாத முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக ரன் பேபி ரன் திரைப்படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் ரன் பேபி ரன் திரைப்படத்தின் தீம் பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ரன் பேபி ரன் தீம் வீடியோ இதோ…