உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான ‘மாமன்னன்’ டிரைலர் எப்போது..? – அட்டகாசமான அப்டேடுடன் வைரலாகும் Glimpse உள்ளே..

மாமன்னன் டிரைலர் வெளியீட்டு தேதி விவரம் உள்ளே – Maamannan Trailer  release announcement | Galatta

முதல் படமான பரியேரும் பெருமாள் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பின் கர்ணன் என்ற திரைப்படத்தை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெற்று தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.தற்போது மாரி செல்வராஜ் வாழை என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தையும் தனுஷ் தயாரிப்பில் தனுஷை வைத்து புது படத்தையும் இயக்கவுள்ளார்.

இதனிடையே இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து வைகை புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா. RK படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாய் நடைபெற்றது. உலகநாயகன் கமல் ஹாசன் உட்பட பல திரைபிரபலங்கள் மற்றும் மாமன்னன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் 8 பாடல்கள் அமைந்துள்ளது. அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் யுக பாரதி எழுதியுள்ளார். தற்போது அணைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று டிரெண்ட்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார் இருந்தும் இது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் டிரைலர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் மாமன்னன் பட டிரைலர் வரும் ஜூன் 16ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது இந்த அப்டேட்டினை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். வழக்கமான மாரி செல்வராஜ் திரைப்படம் போல் சமூக கருத்துகளை பேசியுள்ளதா என்பதை டிரைலர் மூலம் தெரியவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர்.

 

𝟏𝟔.𝟎𝟔.𝟐𝟎𝟐𝟑🔥🥁

Save the date & get ready for the most-awaited #MAAMANNANTrailer @mari_selvaraj @Udhaystalin @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @MShenbagamoort3 @kabilanchelliah @kalaignartv_offpic.twitter.com/wEX9QZLfRB

— Red Giant Movies (@RedGiantMovies_) June 15, 2023

 

மிரட்டலான டைட்டில்.. அடுத்த படத்தில் இயக்குனராக களமிறங்கும் எஸ் ஜே சூர்யா - அட்டகாசமான அப்டேட்டுடன் Exclusive Interview உள்ளே..
சினிமா

மிரட்டலான டைட்டில்.. அடுத்த படத்தில் இயக்குனராக களமிறங்கும் எஸ் ஜே சூர்யா - அட்டகாசமான அப்டேட்டுடன் Exclusive Interview உள்ளே..

பவர் ஸ்டார் பவன் கல்யாண் - RRR தயாரிப்பாளரின் மெகா படத்தில் இணைந்த திமிரு & சுழல் நடிகை ஸ்ரியா ரெட்டி! அதிரடியான அறிவிப்பு இதோ
சினிமா

பவர் ஸ்டார் பவன் கல்யாண் - RRR தயாரிப்பாளரின் மெகா படத்தில் இணைந்த திமிரு & சுழல் நடிகை ஸ்ரியா ரெட்டி! அதிரடியான அறிவிப்பு இதோ

நீண்ட நாளுக்கு பின் தமிழில் ஹிட் கொடுத்த சித்தார்த்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – டக்கர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் உள்ளே..
சினிமா

நீண்ட நாளுக்கு பின் தமிழில் ஹிட் கொடுத்த சித்தார்த்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – டக்கர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் உள்ளே..