'ஆதிபுருஷ்' படத்தை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம்.. அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்..!

ஆதிபுருஷ் தடை செய்ய பிரதமருக்கு கடிதம் விவரம் உள்ளே - Letter to PM modi for ban on prabhas adipurush | Galatta

இராமாயணம் கதையை தழுவி இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து உருவான ஆதிபுருஷ் திரைப்படம் நாடு முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீ ராமராக பிரபாஸ் நடிக்க இவருடன் இணைந்து சீதா தேவியாக கீர்த்தி சனொன் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர் மேலும் ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் உலகளவில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஜூன் 16ம் தேதி வெளியாகி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஆதிபுருஷ் திரைப்படம் ஓடிக் கொண்டிருகின்றது. நான்காவது நாளாக ஓடிக் கொண்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் ரூ 350 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படமாக வலம் வருகிறது. வசூலில் வரவேற்பை பெற்றாலும் அதே நேரத்தில் விமர்சன ரீதியான எதிர்பையும் பெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் VFX காட்சிகள் மோசமாக உள்ளதென்று ஒரு குறை இருக்கையில் படத்தில் இராமாயணத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகளும் வாசங்களும் உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய கோரி அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக வெளியான கடிதத்தில், “ஆதிபுருஷ் திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் ராமர் மற்றும் ஹனுமான் ஆகியோரை அவமதிக்கும் வகையில் உள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் இந்துகள் மற்றும் சனாதன தர்மத்தின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. பிரபு ஸ்ரீ ராம் எந்த மதத்தில் இருந்தாலும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கடவுளாக இருந்து வருபவர். இந்த திரைப்படத்தில் ராமரையும், ராவணனையும் வீடியோ கேம் கதாபாத்திரம் போல் சித்தரிதுள்ளனர். மேலும் இதில் நாட்டில் மற்றும்  உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் காயப்படுத்தும் வகையில் உரையாடல்கள் உள்ளது. எனவே உடனடியாக இந்த ஆதிபுருஷ் படத்தை திரையரங்குகளில் திரையிடுவதை நிறுத்துமாறு பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் வருங்காலத்தில் ஒடிடி தளங்களில் வெளியாவதையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் தொடர்ந்து அந்த கடிதத்தில். “இந்து மத உணர்வுகளை புண்படுத்திய இயக்குனர் (ஓம் ரவுத்), எழுத்தாளர் (மனோஜ் முண்டாசிர் சுக்லா) மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்ட ஒரு கேவலமான திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கக்கூடாது, ஆதிபுருஷ் ஸ்ரீ ராமன் மற்றும் ராமாயணம் மீதான நமது நம்பிக்கையை அழிக்க கூடிய செயல்.” என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளனர். தற்போது அகில இந்தியா திரைப்பட தொழிலாளர் சங்கம் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான கருத்துகளையும் பிரபாஸ் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனார்.

sunaina carries her own belongings for miles at regina spot photos goes viral

உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ எப்போது..? வைரலாகும் அட்டகாசமான தகவல்..!
சினிமா

உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ எப்போது..? வைரலாகும் அட்டகாசமான தகவல்..!

இறுதிகட்டத்தை எட்டிய ஜெயம் ரவியின் இறைவன்.. இயக்குனர் கொடுத்த அப்டேட்.! – உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

இறுதிகட்டத்தை எட்டிய ஜெயம் ரவியின் இறைவன்.. இயக்குனர் கொடுத்த அப்டேட்.! – உற்சாகத்தில் ரசிகர்கள்..

விறுவிறுப்பான படப்பிடிப்பில் தனுஷின் கேப்டன் மில்லர்.. அப்டேட் கொடுத்த இயக்குனர் – ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

விறுவிறுப்பான படப்பிடிப்பில் தனுஷின் கேப்டன் மில்லர்.. அப்டேட் கொடுத்த இயக்குனர் – ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..