'அடேங்கப்பா வெறும் 12 நிமிடங்களா?'- தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் செய்த பக்கா மாஸ் சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் படைத்த சாதனை,thalapathy vijay in leo movie first look poster made massive record in twitter | Galatta

தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வேற லெவல் சாதனை படைத்துள்ளது. என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக தொடர்ந்து என்டர்டெய்ன் செய்து வரும் தளபதி விஜய் அவர்கள் இன்று ஜூன் 22 ஆம் தேதி தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளுக்கு செம பரிசாக அவரது லியோ திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் முதல் பாடலும் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது. தளபதி விஜயின் குரலில் வெளிவந்திருக்கும் லியோ படத்தின் முதல் பாடலான “நா ரெடி” பாடல் தற்போது பாட்டி தொட்டி எங்கும் பாட்டியை கிளப்பி வருகிறது. வழக்கமான தளபதி விஜயின் ஸ்டைலான நடனம், அனிருத் துள்ளலான இசை, தினேஷ் மாஸ்டரின் அட்டகாசமான நடன இயக்கம் என அத்தனையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ச்சியாக ட்ரெண்டிங் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் இந்த பாடலிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு  த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க, அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். 

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 2023ம் ஆண்டு ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் தளபதி விஜயின் பிறந்தநாளில் நள்ளிரவு 12:00 மணி அளவில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது மாபெரும் சாதனை படைத்துள்ளது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட 12 நிமிடங்களிலேயே தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு லட்சம் லைக்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 

முன்னதாக தளபதி விஜய் பிறந்தநாளில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 15 நிமிடங்களில் ஒரு லட்சம் லைக்குகளை பெற்றது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 17 நிமிடங்களில் ஒரு லட்சம் லைக்குகளை பெற்றது. அதற்கு முன்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 51 நிமிடங்களிலும் இயக்குனர் அட்லி இயக்கத்தின் தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த பிகில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 80 நிமிடங்களிலும் ஒரு லட்சம் லைக்குகளை பெற்ற நிலையில், தற்போது வெறும் 12 நிமிடங்களிலேயே லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளதால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 

#LeoFirstLook pic.twitter.com/zephjhBVbu

— Vijay (@actorvijay) June 21, 2023

தளபதி விஜய்க்கு அன்பைப் பொழிந்த நட்சத்திரங்கள்... பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்களின் பட்டியல் இதோ!
சினிமா

தளபதி விஜய்க்கு அன்பைப் பொழிந்த நட்சத்திரங்கள்... பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்களின் பட்டியல் இதோ!

'தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக்கில் இதெல்லாம் கவனித்தீர்களா?'- ஆர்வத்தை தூண்டும் HIDDEN DETAILS இதோ!
சினிமா

'தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக்கில் இதெல்லாம் கவனித்தீர்களா?'- ஆர்வத்தை தூண்டும் HIDDEN DETAILS இதோ!

ஜெயம் TO பொன்னியின் செல்வன் 2... ஜெயம் ரவியின் அட்டகாசமான 20வருட திரைப்பயணம்... எமோஷனலான அறிக்கை இதோ!
சினிமா

ஜெயம் TO பொன்னியின் செல்வன் 2... ஜெயம் ரவியின் அட்டகாசமான 20வருட திரைப்பயணம்... எமோஷனலான அறிக்கை இதோ!