டைட்டானிக் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்கு ரூ.77 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 14-வது நாளாக நீடித்து வருகிறது.  இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 14-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையே இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

மேலும் ரஷியாவின் படையெடுப்பை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு உதவும் நோக்கில் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் உக்ரைனுக்கு நன்கொடைகள் அளித்து வருகின்றன.

இந்நிலையில் டைட்டானிக் திரைப்படத்தில் 'ஜேக்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ, உக்ரைனுக்கு ஆதரவாக 10 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 77 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். லியோனார்டோ டிகாப்ரியோவின் தாய்வழி பாட்டியான ஹெலனே இன்டென்பிர்கென் தெற்கு உக்ரைனின் ஒடெசாவில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.