விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் OTT-யில் ஒளிபரப்பு செய்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் கடந்த மாதம் தொடங்கினர்.இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.படப்பிடிப்புகள் தாமதவத்தால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும்,பிக்பாஸ் சீசன் 6-ல் மீண்டும் வருவேன் கமல் தெரிவித்திருந்தார்.

கமலுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை சிலம்பரசன் TR தொகுத்து வழங்குகிறார்.இவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் WIldcard எண்ட்ரியாக கலக்கப்போவது யாரு சதிஷ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்தனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது மற்றுமொரு Wildcard என்ட்ரி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.பிக்பாஸ் 4 தொடரில் முக்கிய போட்டியாளராக அசத்திய ரம்யா பாண்டியன் தான் அந்த போட்டியாளர்.இவரது வருகையை யாரும் எதிர்பார்க்காத நிலையில் அடுத்து எப்படி பிக்பாஸ் அல்டிமேட் செல்லப்போகிறது என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.