தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.50 வருடங்களுக்கும் மேலாக தனது படங்கள் மூலம் ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வருகிறார்.இவரது திரைப்படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொள்ளும்.பல வருடங்கள் நடித்து வந்தாலும் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக இவரது பட வசூல்கள் இருக்கும்.

தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் 2021 தீபாவளிக்கு திரைக்கு வந்து சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.இந்த படத்தினை தொடர்ந்து இன்னும் சில படங்கள் ரஜினிகாந்த் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை டாக்டர்,பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஷூட்டிங்கில் வரும் ஆகஸ்ட் 15 அல்லது ஆகுஸ்ட் 22 தேதியில் இணைவதாக சூப்பர்ஸ்டார் சில தினங்களுக்கு முன் உறுதி செய்தார்.இந்த படத்தில் பல நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்து வருகின்றன.இதில் ரம்யா கிருஷ்ணன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் ஒரு பிரபல நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரம்யா கிருஷ்ணன்,ஜெயிலர் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.அத்துடன் இந்த படத்தின் ஷூட்டிங்கில் ஆகஸ்ட் 10 நாளை முதல் இணையவுள்ளதாகவும் தெரிவித்துளளார்.இதன்மூலம் படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்கும் என்று தெரிகிறது.படையப்பா படத்தின் பெரிய வெற்றியை அடுத்து ரஜினிகாந்த் படத்தில் பல வருடங்கள் கழித்து ரம்யா கிருஷ்ணன் இணைவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.