சில தினங்களுக்கு முன்பு நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்த குருதி ஆட்டம் திரைப்படத்தின் இயக்குனரான ஸ்ரீ கணேஷ் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து தனக்கே உரித்தான பாணியில் வரிசையாக திரில்லர் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் வெற்றி.

கடைசியாக வெற்றி நடிப்பில் வெளிவந்த வனம் மற்றும் ஜோதி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து மெமரிஸ், கண்ணகி, ரெட் சாண்டல் மற்றும் பம்பர் என வரிசையாக நடிகர் வெற்றி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு வெற்றி நடிப்பில் வெளிவந்த ஜீவி திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜீவி 2 திரைப்படம் தயாரானது. ஜீவி படத்தை இயக்கிய இயக்குனர் VJ.கோபிநாத் அவர்ளே ஜீவி 2 படத்தையும் இயக்கினார். வெற்றியுடன் இணைந்து கருணாகரன், ரோகினி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ஜீவி 2 திரைப்படம் விரைவில் Aha தமிழ் தளத்தில் வெளியாகவுள்ளது. ஜீவி 2 படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜீவி 2 திரைப்படத்திலிருந்து நீ நீ போதுமே பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…