தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து ரசிகர்களுக்கு நல்ல படைப்புகளை வழங்கி வருகிறது தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி, சுல்தான், O2 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது.

கடைசியாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான வட்டம் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸானது. அடுத்ததாக கைதி திரைப்ப்படத்தின் இந்தி ரீமேக்காக தயாராகும் போலா திரைப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் கணம்

தமிழில் கணம் என்றும் தெலுங்கில் ஓக்கே ஒக்க ஜீவிதம் என்றும் இருமொழிகளில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். சர்வானந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் கணம் திரைப்படத்தில், ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க, அமலா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், M.S.பாஸ்கர், ரவி ராகவேந்திரா, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுஜித் சாரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்யும் கணம் திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கணம் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 

Get ready to roll back your memories with #Kanam
In Theaters from September 9th ❤️@ImSharwanand @riturv @amalaakkineni1 @actorsathish @thilak_ramesh @JxBe @sujithsarang @sreejithsarang @twittshrees @prabhu_sr #கணம்#KanamFromSep9th pic.twitter.com/Ik6wQJj3vh

— DreamWarriorPictures (@DreamWarriorpic) August 9, 2022