கன்னட திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் வலம் வரும் யஷ் கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படத்திற்கு இந்திய திரை உலகின் பல மொழி சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனியான இடம்பிடித்தார். கே ஜி எஃப்-1 திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம்  தயாரானது.

பல கோடி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சில தினங்களுக்கு முன்பு உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்திய பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை சரித்திரம் படைத்து வருகிறது. 

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை ரிப்பீட் மோடில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  மேலும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை கண்டு ரசித்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

அந்த வகையில் தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ராம்சரண் கேஜிஎஃப் 2 திரைப்படத்தை பார்த்த பிறகு, படக்குழுவினரை பாராட்டியுள்ளார். நடிகர் யஷ் இயக்குனர், பிரசாந்த் நீல் மற்றும் Hombale தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்த பட குழுவினரையும் குறிப்பிட்டு பாராட்டிய ராம்சரணின் ட்விட்டரில் பதிவு இதோ…