கூகுள் குட்டப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | April 23, 2022 18:54 PM IST
மலையாளத்தில் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள படம் கூகுள் குட்டப்பா.இந்த படத்தினை இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் ஆர் கே செல்லுலாய்டு மற்றும் குளோபல் என்டேர்டைன்மென்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்துள்ளனர்.கே எஸ் ரவிக்குமார் மற்றும் யோகி பாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.ஒரு ரோபோட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வருகிறது.
ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் சில பாடல்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.
தற்போது இந்த படம் வரும் மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.ட்ரைலர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த ,வித்தியாசமான இந்த படத்தினை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The humanoid entertainer #KoogleKuttapa is all set to hit screens from May 6th.#KoogleKuttapaFromMay6th @ksravikumardir @TharshanShant @Losliyaoff @sabari_gireesn @gurusaravanan @GhibranOfficial @iYogiBabu #PranksterRagul @madhankarky @Kavitha_Stylist @saregamasouth pic.twitter.com/ve1oaQaiTX
— Yuvraaj (@proyuvraaj) April 23, 2022
Catch the super impressive trailer of KS Ravikumar's Koogle Kutappa | Tharshan
14/03/2022 03:48 PM
GV Prakash lends his voice for a romantic song in Tharshan's Koogle Kuttapa!
21/10/2021 05:35 PM