காதலன் மேல் காதலி காலை போட்டுக்கொண்டு, பட்டபகலில் பைக்கில் அமர்ந்தபடியே, “லிப் டூ லிப் முத்தம்” கொடுத்தபடி காமக்களியாட்டத்தில் ஈடுபட்டபடியே, உல்லாச பயணம் மேற்கொண்டது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் தான், ஒரு காதல் ஜோடி யாரை பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், இப்படியான ஒரு உல்லாச பயணம் சென்று உள்ளனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள டவுன் அருகே செல்லும் ஒரு சாலையில், அந்த பகுதியைச் சேர்ந்த  ஒரு காதல் ஜோடி, நேற்றைய தினம் காலை நேரத்தில் அந்த பகுதியில் பைக்கில் பயணித்து உள்ளனர். இந்த பைக் பயணத்தில், அந்த காதல் ஜோடி, இயல்பை மீறி வேறு விதமாக ஒருவருக்கொருவர் ஒட்டிக்கொண்டும், உரசிக்கொண்டும் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, அந்த வழியாக பல வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்து உள்ளது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த காதல் ஜோடி, காதல் என்கிற பெயரில் சல்லாபத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, பைக்கில் அமர்ந்தபடியே சென்றுக்கொண்டிருந்த அந்த ஜோடியானது, திடீரென அந்த இளம் பெண் அந்த பைக்கின் முன்பக்கம் காதலன் மேல் காலை போட்டு, அந்த காதலனை கட்டிப்பிடித்தப்படி அமர்ந் உள்ளார். அதாவது, முன்பக்கம் தனது காதலனை பார்த்தபடியே, அவனை கட்டியணைத்த நிலையில் அமர்ந்து, காதலனை இறுக அணைத்துக் கொண்டு, இருவரும் “லிப் டூ லிப் முத்தம்” கொடுத்தபடி அந்த பட்டபகல் நேரத்தில் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டபடியே, இப்படி ஒரு உல்லாச பயணம் சென்று கொண்டிருந்து உள்ளனர்.

இந்த காதல் ஜோடியின் இந்த உல்லாச பயணம், பல மணி நேரம் நீடித்த நிலையில், அந்த வழியாக சென்றவர்கள், இதனை பார்த்து துளியும் சகித்துக்கொள்ள முடியாமல், அவர்களை திட்டி உள்ளனர்.

ஆனாலும், தங்களை பொது மக்கள் வேடிக்கை பார்ப்பதை கூட, அந்த காதல் ஜோடி துளியும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்த பைக் பயணத்தில் சில்மிஷத்திலும், சல்லாபத்திலும் ஈடுபட்டுக்கொண்டே சென்று உள்ளனர். 

அப்போது அந்த  காதலன் - காதலியின் இந்த உல்லாச லிப் லாக் முத்தக் காட்சிகளை, அந்த வழியாக சென்ற பலரும், தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

அதே நேரத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும், இதனை நேரில் பார்த்து, கிரங்கிப்போன நிலையில், இந்த காட்சியை மேலும் மேலும் பார்க்கும் விதமாக, அந்த காதல் ஜோடியை பின் தொடர்ந்து சில மைல் தூரம் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது, இந்த காதல் ஜோடியின் இந்த உல்லாச பைக் பயண வீடியோ மற்றும் போட்டோக்கள் அனைத்தும், கர்நாடகா மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவானது, அந்த மாநில போலீசாரின் கவனத்திற்கும் சென்ற நிலையில், அந்த காதல் ஜோடி எச்சரிப்பதற்காக, அவர்கள் யார் என்று, தீவிரமாக விசாரித்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம்,  கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.