தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் சுந்தர்.C . தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து வரிசையாக பல நகைச்சுவை ஃபேமிலி என்ற பெயரில் ரயில் படங்களை கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் படைப்புகளால் மகிழ்வித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அரண்மனை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஹாரர் காமெடி திரைப்படமாக சூப்பர்ஹிட்டானது. இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வரும் சுந்தர்.C நடிப்பில் வல்லான், தலைநகரம் 2, ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக தயாராகி வருகின்றன.

இதனிடையேஏ அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் ஜெய் இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் வருகிற மே மாதம் பட்டாம்பூச்சி திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் பட்டாம்பூச்சி திரைப்படத்தை தயாரித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக இயக்குனர் பத்ரி நாராயணன் எழுதி இயக்கியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார்.நவநீத்.S இசையமைத்துள்ளார். இந்நிலையில், தற்போது பட்டாம்பூச்சி திரைப்படத்தின் டீசர் வெளியானது. விறுவிறுப்பான அந்த பட்டாம்பூச்சி திரைப்படத்தின் டீசர் இதோ…