தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விதார்த் ஆரம்பக் கட்டத்தில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த  மைனா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.

குறிப்பாக ஆள், குரங்கு பொம்மை, குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். அந்த வகையில் அடுத்ததாக நடிகர் விதார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பயணிகள் கவனிக்கவும்.

மேலும் பயணிகள் கவனிக்கவும் படத்தில் கருணாகரன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, மசூம் சங்கர், பிரேம்குமார்,VJ சரித்திரன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் நேரடியாக aha தமிழ் OTT தளத்தில் வருகிற ஏப்ரல் 29ம் தேதி ரிலீஸாகவுள்ளது. 

S.பாண்டி குமார் ஒளிப்பதிவில் RS.சதீஷ்குமார் படத்தொகுப்பு செய்ய, ஷமந்த் நாக் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பயணிகள் கவனிக்கவும் திரைப்படத்தின் டைலர் தற்போது வெளியானது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள பயணிகள் கவனிக்கவும் திரைப்படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.