பல போராட்டங்களை கடந்து மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்து சின்னத்திரையில் நடிகையாக பிரபலமானார் நிஹாரிகா.நடனத்தில் அசத்தும் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.இந்த நிகழ்ச்சியின் அரையிறுதி வரை சென்று அசத்தினார் நிஹாரிகா.

ரம்யாகிருஷ்ணன் நடித்த வம்சம் தொடரில் ஸ்கூல் பெண்ணாக நடித்து தனது சீரியல் என்ட்ரியை கொடுத்தார் நிஹாரிகா.இதனை அடுத்து தெலுங்கிலும் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கினார் நிஹாரிகா.மேலும் சந்தானத்தின் சக்கப்போடு போடு ராஜா,ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.

ஹீரோயினாகவும் வட்டம்,உன்னால் என்னால்,எவனும் புத்தனில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார்.ராஜா ராணி சீசன் 2வில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் நிஹாரிகா,அடுத்ததாக வேலைக்காரன் தொடரிலும் இவர் முக்கிய வேடத்தில் பட்டையை கிளப்ப இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

இவர் இயக்குனர் ரஜித்தை காதலித்து கரம்பிடித்தார்.அடுத்ததாக இவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சுனிதா மற்றும் சீரியல் நடிகர் யோகேஷ் உடன் நடிக்கின்றனர்.தற்போது இவர் ஜீ தமிழில் வெகு விரைவில் ஒளிபரப்பாகவுள்ள வித்யா நம்பர் 1 என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.தனது அடுத்தடுத்த முயற்சிகளில் பெரிய வெற்றியை பெற்று புதிய உச்சத்தை தொட நிஹாரிகாவுக்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.