தமிழ் திரையுலகின் சிறந்த நடிகராகவும் முன்னணி கதாநாயகனாகவும் வலம் வரும் நடிகர் கார்த்தி முன்னதாக, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனையடுத்து பிரபல இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் கார்த்தி , தொடர்ந்து கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்படும் விருமன் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் ராஜ்கிரண், சூரி ஆகியோர் நடிக்க, செல்வக்குமார்.எஸ்.கே ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மதுரையில் முழுவீச்சில் நடைபெற்று வரும் விருமன் படப்பிடிப்பில் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது. 

இந்நிலையில் பிரபல நடிகர் மனோஜ் பாரதிராஜா விருமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதுகுறித்து மனோஜ் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “உன்னோடு இணைந்து பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது… நீ இப்போதும் நான் சிறுவயதில் பார்த்த அதே குழந்தையாகவே இருக்கிறாய்!” எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பில் கார்த்தி உடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ...