தென்னிந்திய திரை உலகில் சிறந்த நடன இயக்குனராகவும், மாஸ்ஸான கமர்சியல் இயக்குனராகவும் நடிகராகவும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

முன்னதாக ராகவா லாரன்ஸின் சூப்பர் ஹிட் திரைப்படங்களான முனி - காஞ்சனா சீரிஸ் வரிசையில் அடுத்ததாக லாரன்ஸ் துர்கா படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இயக்குனர் வெற்றிமாறனின் கதை திரைக்கதையில், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இதனிடையே, FiveStar கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக களமிறங்கும் ருத்ரன் படத்திலும் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். ருத்ரன் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், நாசர் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

R.D.ராஜசேகர் ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசை அமைக்கும் ருத்ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் ருத்ரன் படப்பிடிப்பிலிருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமாரின் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியானது. அந்த புகைப்படம் இதோ...