வேட்டையன் ராஜா பராக் பராக்... ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட அட்டகாசமான புதிய அறிவிப்பு! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ

சந்திரமுகி 2 பட டப்பிங்கை தொடங்கிய ராகவா லாரன்ஸ்,raghava lawrence started his dubbing for chandramukhi 2 movie | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகளை ராகவா லாரன்ஸ் தொடங்கி இருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் ஃபேவரட் நடன இயக்குனர் பிளாக்பஸ்டர் இயக்குனர் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் என வலம் வரும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பக்கா அதிரடி ஆக்சன் படமாக சமீபத்தில் வெளிவந்த ருத்ரன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து முதல் முறையாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் ஜிகர்தண்டா 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருக்கும் நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இயக்குனர் வெற்றிமாறனின் கதை & திரைக்கதையில் உருவாக இருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான அதிகாரம் திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இதனிடையே ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்த ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களில் முக்கிய படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. 

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். பிரபல பாலிவுட் நடிகை நடிகை கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில், வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறைவடைந்தது. வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்கான டப்பிங்கில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் “வேட்டையன் ராஜா பராக் பராக் பராக்!! ராகவா லாரன்ஸ் வேட்டையனாக மாறி சந்திரமுகி 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார்.” என தெரிவித்துள்ளது. ராகவா லாரன்ஸ் டப்பிங்கில் ஈடுபட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ…
 

Vettaiyan Raja Paraak Paraak Paraak! Raghava Lawrence transforms as vettaiyan and starts dubbing for Chandramukhi 2 from today🗝️ @offl_Lawrence

Releasing in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada!#Chandramukhi2🗝️
🎬 #PVasu
🎶 @mmkeeravaani
🎥 @RDRajasekar
🛠️ #ThottaTharanipic.twitter.com/m8h1hGspAi

— Lyca Productions (@LycaProductions) July 3, 2023

காமெடி சரவெடியாக வரும் அனுஷ்காவின் கம் பேக் படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி… ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

காமெடி சரவெடியாக வரும் அனுஷ்காவின் கம் பேக் படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி… ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

'இது சாகச சவாரி தான்!'- கமல்ஹாசனின் இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் வெளியிட்ட வைரல் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

'இது சாகச சவாரி தான்!'- கமல்ஹாசனின் இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் வெளியிட்ட வைரல் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்

ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX படப்பிடிப்பில் கொண்டாட்டம்... அதிரடி அறிவிப்புடன் வந்த Shooting Spot GLIMPSE இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX படப்பிடிப்பில் கொண்டாட்டம்... அதிரடி அறிவிப்புடன் வந்த Shooting Spot GLIMPSE இதோ!