சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு… மீண்டும் 'நெருப்புடா' கூட்டணி! வேற லெவல் கலக்கல் ப்ரோமோ இதோ

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு ப்ரோமோ,rajinikanth in jailer movie first single announcement promo | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் பட முதல் பாடலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. என்றென்றும் மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தனது ஸ்டைலால் ரசிகர்களை புகழ் பெற்று வருகிறார் அந்த வகையில் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டகாசமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் முக்கிய வேடத்தில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் திரைப்படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைய் அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த ஆக்சன் என்டர்டைனிங் ட்ரீட்டாக வரவிருக்கும் படம் தான் ஜெயிலர்.

முதல்முறையாக கோலமாவு கோகிலா டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். 

ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் நெல்சன் தனது திரைப்படங்களில் வழக்கமாக பாடல்கள் வெளியாவதற்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து கலக்கலான ப்ரோமோ வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த ப்ரோமோ வீடியோக்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புகளை பெறும். அந்த வகையில் தற்போது ஜெயலர் திரைப்படத்தின் முதல் பாடலான "காவாலா" பாடலை அறிவிக்கும் வகையில் புது ப்ரோமோ வீடியோவை நெல்சன் ஸ்டைலில் படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்தப் பாடலை இயக்குனரும் நடிகரும் பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார். கபாலி படத்தின் நெருப்புடா எழுதி பாடிய அருண் ராஜா காமராஜ் மீண்டும் ஜெயிலர் படத்திற்காக ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு பாடலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. கலக்கலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

'இது சாகச சவாரி தான்!'- கமல்ஹாசனின் இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் வெளியிட்ட வைரல் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

'இது சாகச சவாரி தான்!'- கமல்ஹாசனின் இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் வெளியிட்ட வைரல் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்

ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX படப்பிடிப்பில் கொண்டாட்டம்... அதிரடி அறிவிப்புடன் வந்த Shooting Spot GLIMPSE இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX படப்பிடிப்பில் கொண்டாட்டம்... அதிரடி அறிவிப்புடன் வந்த Shooting Spot GLIMPSE இதோ!

விறுவிறுப்பான கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்... மாளவிகா மோகனன் பகிர்ந்த சர்ப்ரைஸ் புகைப்படங்கள் இதோ!
சினிமா

விறுவிறுப்பான கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்... மாளவிகா மோகனன் பகிர்ந்த சர்ப்ரைஸ் புகைப்படங்கள் இதோ!