கார்த்திக் சுப்பராஜ் - ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் அதிரடியான ஜிகர்தண்டா DOUBLE X… ரசிகர்களை கவர்ந்த அசத்தலான டீசர் இதோ!

கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா DOUBLE X பட டீசர் வெளியீடு,raghava lawrence sj suryah in jigarthanda doublex teaser out now | Galatta

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்த நடித்துள்ள ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியானது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி ஸ்டைலில் பல்வேறு விதமான கதைக்களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வருபவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இயக்குனராக மட்டுமல்லாமல் தற்சமயம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்தவரும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக கதாசிரியராக பணியாற்றியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமான ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தை தற்போது கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இரண்டாவது படமாக வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் பக்கா ஆக்சன் காமெடி படமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில் ஜிகர்தண்டா 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார். ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தின் அறிவுப்பு டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பெரும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. முன்னதாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் கதை திரைக்கதையில் உருவாகும் அதிகாரம் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் விரைவில் துர்கா எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல் நடிகர் விஷால் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் SJ.சூர்யா நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் ராம்சரண் நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்தில் தற்போது வில்லனாக SJ.சூர்யா நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா DOUBLE X படத்தில் நடித்துள்ளனர். ஜிகர்தண்டா படத்தைப் போலவே ஒரு இயக்குனருக்கும் கேங்ஸ்டருக்கும் இடையிலான அட்டகாசமான ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில், ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ஜிகர்தண்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜிகர்தண்டா திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் தற்போது வெளியானது. ரசிகர்களை கவர்ந்த அதிரடியான அந்த டீசர் இதோ…