பாக்ஸ் ஆபிஸின் கிங் என காட்டிய ஷாரூக் கான்... அட்லீயின் ஜவான் பட 2 நாள் வசூல் நிலவரம் இதோ!

ஷாருக்கானின் ஜவான் படம் இரண்டு நாளில் 240 கோடி வசூல்,Shah rukh khan in jawan crossed 240 crores in just 2 days | Galatta

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் - நயன்தாரா இணைந்து நடித்துள்ள ஜவான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெறும் இரண்டு நாட்களிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் ஷாரூக் கானுக்கு உலகம் முழுக்க மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யம் உள்ளது. கடைசியாக ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டங்கி திரைப்படத்தில் தற்போது ஷாரூக் கான் நடித்து வருகிறார். மேலும் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் டைகர் 3 படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் ஷாரூக் கான் நடிக்க இருக்கிறார். 

இதனிடையே நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்த மெகா ஹிட் படமாக வெளிவந்திருக்கிறது ஜமான் திரைப்படம். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக எதிர்பாக்கப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் இல்லை, இது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என சொல்லலாம். GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என PAN INDIA படமாக கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் ரிலீஸாகியுள்ளது. 

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ஷாருக் கானின் ஜவான் படம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. முதல் நாளிலேயே 129 கோடி ரூபாய் வரை வசூலித்த ஜவான் திரைப்படம் தற்போது இரண்டாவது நாளில் இன்னும் பெரிய சாதனை படைத்திருக்கிறது. வெளியான இரண்டே நாட்களில் ஷாருக் கானின் ஜமான் திரைப்படம் 240.40 கோடி ரூபாய் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடரும் பட்சத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை மிக எளிதாக ஜவான் படம் எட்டும் என்றும் அதைவிட இன்னும் பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸில் தான் ஒரு கிங் என ஷாருக்கான் மீண்டும் நிரூபித்து இருக்கும் ஜவான் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து வெளியான அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Winning hearts and BreaKING records! ❤️‍🔥

Book your tickets now!https://t.co/B5xelUahHO

Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/hv5cwnk7HL

— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 9, 2023