மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படம் - குரங்கு பொம்மை இயக்குனரின் அடுத்த படைப்பு… மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு,Vijay sethupathi 50th film maharaja first look poster out now | Galatta

மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் படத்திற்கு படம் விதவிதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது திரைப் பயணத்தில் 50வது படமாக நடிக்கும் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது . தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வரும் வரும் மக்கள் செல்வன், இயக்குனர் அட்லீயின் முதல் பாலிவுட் படமாக ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் ஜவான் படத்திலும் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இதுவரை இந்த 2023 ஆம் ஆண்டில் வெளிவந்த மைக்கெல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மும்பைக்கர் ( மாநகரம் ஹிந்தி ரீமேக்) ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி, கடந்த மார்ச் மாத இறுதியில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பாகம் 1 திரைப்படத்தில் சூரி உடன் இணைந்து பெருமாள் வாத்தியார் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் மிக குறைவான காட்சிகளில் தோன்றினாலும் தனது நடிப்பால் மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். விடுதலை பாகம் 2 திரைப்படம் அடுத்த 4-5 மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து பாலிவுட் திரையுலகில் வரிசையாக நடிக்கும் விஜய் சேதுபதி ஏஜென்ட் வினோத், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும் நடித்துள்ளார். அடுத்ததாக கடந்த 2018ல் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமாருடன் மீண்டும் இணைந்த இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தனது திரைபயணத்தில் 50வது படமாக உருவாகும் மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி தற்போது நடித்த வருகிறார். குரங்கு பொம்மை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகும் மகாராஜா திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனரும் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் கஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன் தாஸ் மற்றும் அபிராமி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அஜனீஸ் பி லோக்நாத் இசையமைக்கும் மகாராஜா திரைப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. மகாராஜா டைட்டில் வெளியான போது அதில் "ரா" என்ற எழுத்தில் சவரக்கத்தி இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது சவரம் செய்ய பயன்படுத்தப்படும் நாற்காலியில் காயங்களோடு ரத்தம் சொட்ட சொட்ட கையில் அரிவாளுடன் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

#MaharajaFirstLook@Dir_nithilan @PassionStudios_ @TheRoute @Sudhans2017 @Jagadishbliss @anuragkashyap72 @Natty_Nataraj @mamtamohan @Abhiramiact @AjaneeshB @Philoedit @DKP_DOP @ActionAnlarasu @ThinkStudiosInd @infinit_maze @jungleeMusicSTH @Donechannel1 #VJS50FirstLook #VJS50pic.twitter.com/7fF5Y2rDao

— VijaySethupathi (@VijaySethuOffl) September 10, 2023