"தளபதி விஜயின் லியோ தான் முதல் இந்திய படம்!"- ரிலீசுக்கு 40 நாட்கள் முன்பே இப்படி ஒரு சாதனையா?- வேற வெவல் அப்டேட் இதோ

அட்வான்ஸ் புக்கிங்கில் தளபதி விஜய் லியோ படைத்த சாதனை,thalapathy vijay in leo movie record making advance booking in uk | Galatta

இதுவரை எந்த இந்திய படமும் செய்திடாத புதிய சாதனையை ரிலீஸுக்கு 40 நாட்கள் முன்பே லியோ படைத்திருக்கிறது. தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகரான தளபதி விஜய் அடுத்ததாக முதல்முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளன. இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வருகிற லியோ திரைப்படம் இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் தளபதி விஜயின் பிறந்தநாள் பரிசாக வந்த நா ரெடி பாடல், சஞ்சய் தத்தின் பிறந்தநாள் பரிசாக வந்த ஆண்டனி தாஸ் GLIMPSE மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுனின் பிறந்தநாள் பரிசாக வந்த ஹெரால்டு தாஸ் GLIMPSE வீடியோக்கள் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன.

இதனிடையே இதுவரை எந்த இந்திய திரைப்படத்திற்கும் இல்லாத அளவில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டிருப்பதாக UK-வில் லியோ திரைப்படத்தை வெளியிட்டு இருக்கும் அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட 24 மணி நேரங்களில் 10,000க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளதாகவும், ரிலீசுக்கு ஆறு வாரங்கள் முன்பே அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்ட முதல் இந்திய படமாக லியோ திரைப்படம் புதிய சாதனை படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிரடி அறிவிப்பு இதோ…
 

Eyyy ella oorum namma rules 🔥#Leo is the first Indian film to open UK bookings 6 weeks before release & shatter records with 10k+ tickets sold in just 24 hours 💣

Nanba, kondadi kolutha get ready we’re opening in other countries very sooon 🤜🤛

Power kick-u 🤩 @ahimsafilmspic.twitter.com/bvuSPyIGO7

— Seven Screen Studio (@7screenstudio) September 9, 2023