பழைய பாடலை அட்டகாசமான Remix செய்யும் ராகவா லாரன்ஸ்.. – வைரலாகும் ருத்ரன் பட அறிவிப்பு இதோ..

பழைய பாடலை ரீமிக்ஸ் செய்யும் ருத்ரன் படக்குழு - Rudhran team announce first single Remix song | Galatta

கமர்ஷியல் திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் பல வெற்றி படங்களை கொடுத்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை கொடுப்பவர். தொடர்ந்து குழந்தைகளுக்கும் ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்த படங்களில் கொடுத்து வருபவர் லாரன்ஸ். அதன் படி முனி தொடர் சிறந்த எடுத்துகாட்டு. தற்போது ராகவா லாரன்ஸ் 'அதிகாரம்', 'ருத்ரன்', 'சந்திரமுகி பாகம் 2' மற்றும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்களில் நடித்து வருகிறார். அதன் பின் 'முனி' தொடரில் களம் இறங்கவுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சரத் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர், மேலும் இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டுக்கு வெளியிட்ட சிறப்பு வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது.

தயாரிப்பாளர் S.கதிரேசன் தனது FIVE STAR கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ருத்ரன் திரைப்படத்தில் முதல் பாடல் ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல் வரும் பிப்ரவரி 11 அன்று வெளியாகவுள்ளது.  1962 ல் வெளியான 'வீர திருமகன்' என்ற படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம் பெற்றுள்ள பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலின் ரீமிக்ஸ் ஆக இந்த பாடல் அமையவுள்ளது.  முன்னதாக ராகவா லாரன்ஸ் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ திரைப்படத்தில் ‘ஆடலுடன் பாடலை கேட்டேன்’  பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பார். அந்த பாடலில் இடம் பெற்றுள்ள  அவரின் ஆட்டம் அப்போது டிரெண்ட் ஆனது. அதன் வரிசையில் இந்த பாடலும் இடம் பெரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

One of the most celebrated classic hit song #PaadathaPatellam gets a trendy, foot tapping remix in #Rudhran 🥳

First single from February 11th !!

⁦⁦@offl_Lawrencepic.twitter.com/TMLJfsyUdz

— S Kathiresan (@kathiresan_offl) February 9, 2023

அஜித் குமாரின் துணிவு பட OTT ரிலீஸோடு வரும் ஸ்பெஷல் ட்ரீட்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! விவரம் உள்ளே
சினிமா

அஜித் குமாரின் துணிவு பட OTT ரிலீஸோடு வரும் ஸ்பெஷல் ட்ரீட்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! விவரம் உள்ளே

வாத்தி vs பத்து தல.. இயக்குனரின் அட்டகாசமான பதில்..-  வைரலாகும் முழு வீடியோ இதோ..
சினிமா

வாத்தி vs பத்து தல.. இயக்குனரின் அட்டகாசமான பதில்..- வைரலாகும் முழு வீடியோ இதோ..

‘சர்வமும் யுவனே..’ பிக்பாஸ் கவினின் Surprise - யுவன் ரசிகர்களால் வைரலாகும் டாடா படக்குழுவினரின் வீடியோ இதோ..
சினிமா

‘சர்வமும் யுவனே..’ பிக்பாஸ் கவினின் Surprise - யுவன் ரசிகர்களால் வைரலாகும் டாடா படக்குழுவினரின் வீடியோ இதோ..