அஜித் குமாரின் துணிவு பட OTT ரிலீஸோடு வரும் ஸ்பெஷல் ட்ரீட்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! விவரம் உள்ளே

அஜித்குமாரின் துணிவு பட முழு ஆல்பம் ரிலீஸ் அறிவிப்பு,ajith kumar in thunivu movie full album release announcement | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் திகழும் அஜித்குமார் அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் AK62 படத்தில் நடிக்கிறார். முன்னதாக இத்திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சமீபத்தில் விக்னேஷ் சிவன் AK62 படத்திலிருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக அத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீசானது அஜித்குமாரின் துணிவு திரைப்படம்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்துள்ள துணிவு திரைப்படம் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்றியுள்ள துணிவு படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றியுள்ளார்.

பக்கா அதிரடி ஆக்சன் படமாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட துணிவு திரைப்படத்தில் அஜித் குமாருடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட அஜித்குமாரின் துணிவு திரைப்படம் நாளை பிப்ரவரி 8ம் தேதி முதல் NETFLIX தளத்தில் ரிலீஸாகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக துணிவு திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் கொண்ட முழு ஆல்பம் நாளை பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

The Full Album of #Thunivu is something you can't miss 🔥
FULL ALBUM OUT Tomorrow!#Ajithkumar #HVinoth@boneykapoor @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies @kalaignartv_off @netflixindia #RomeoPictures @mynameisraahul @sureshchandraa #NiravShah @ghibranofficial pic.twitter.com/7xChqOh2qE

— Zee Music South (@zeemusicsouth) February 7, 2023

சினிமா

"மீண்டும்.. மீண்டுமா?" தள்ளிப்போன சமந்தாவின் புதிய திரைப்படம்.. - ரசிகர்கள் ஏமாற்றம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

“உன் துணைக்கு நான்தான்..” வாத்தி தனுஷுக்கு வாத்தியாரான இளையராஜா - வைரலாகும் விடுதலை பட பாடலின் புது புரோமோ இதோ..
சினிமா

“உன் துணைக்கு நான்தான்..” வாத்தி தனுஷுக்கு வாத்தியாரான இளையராஜா - வைரலாகும் விடுதலை பட பாடலின் புது புரோமோ இதோ..

தனுஷ் ரசிகர்களே தயாரா..? வாத்தி படத்தின் அதிரடியான ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

தனுஷ் ரசிகர்களே தயாரா..? வாத்தி படத்தின் அதிரடியான ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!