வாத்தி vs பத்து தல.. இயக்குனரின் அட்டகாசமான பதில்..- வைரலாகும் முழு வீடியோ இதோ..

படங்களின் மோதல் குறித்து பத்து தல இயக்குனர் -  Director about Box office clash between two star films | Galatta

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் இயக்குனர் ஒபெலி N. கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் TR நடித்த ‘பத்து தல’ கன்னடத்தில் சூப்பர் ஹிட் திரைப்படமான  மஃப்டி படத்தின் ரீமேக்காக வெளிவரவிருக்கும் பத்து தல படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து நடிகர் கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் ஒபெலி N.கிருஷ்ணா நமது கலாட்டா தமிழ் மீடியா பேட்டியில் கலந்து கொண்டார். இதில் பத்து தல படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் தனுஷ் நடிக்கும்  வாத்தி திரைப்படத்துடன் சிலம்பரசனின் பத்து தல திரைப்படம் மோதலாக ரசிகர்கள் பார்க்கிறார்களா? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு,

அவர், "வாத்தி திரைப்படத்திற்கும் இந்த பத்து தல திரைப்படத்திற்கும் என்ன மோதல்? இன்னும் வாரிசு, துணிவு பட மோதல் பஞ்சாயத்தே இன்னும் முடிஞ்சபாடில்லை. இது நமக்கு தேவையில்லாத விவாதம். மோதல்கள் எல்லாம் வியாபார யுக்தியால் அணுகபட வேண்டியது. பார்வையாளரா நம்ம படம் பார்த்தோமா.. நல்லாருக்கா.. நல்லாருந்தா படம் பார்க்கலாம். ரொம்ப நல்லாருந்தா இன்னொரு முறை பார்க்கலாம். நானும் ஒரு பார்வையாளரா அதைதான் செய்வேன். எவ்வளவு வசூல் பண்ணுச்சுனு கவலை படுறதுல நமக்கு ஒன்னும் நடக்க போறது இல்ல. அது சாமானியனுக்கு ஏதும் உதவ போவதில்லை.அதே மாதிரி தான் வாத்தி திரைப்படம் நல்லாருந்தா வாத்தி திரைப்படம் நல்லா ஓடப் போகுது.. பத்து தல நல்லாருந்தா பத்து தல ஓடப்போகுது. அதனால நமக்குள்ள எதுக்கு மோதல்..” என்று குறிப்பிட்டார்.

மேலும் பத்து தல படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பத்து தல பட இயக்குனர் ஒபெலி N. கிருஷ்ணா நமது கலாட்டா மீடியா பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

“உன் துணைக்கு நான்தான்..” வாத்தி தனுஷுக்கு வாத்தியாரான இளையராஜா - வைரலாகும் விடுதலை பட பாடலின் புது புரோமோ இதோ..
சினிமா

“உன் துணைக்கு நான்தான்..” வாத்தி தனுஷுக்கு வாத்தியாரான இளையராஜா - வைரலாகும் விடுதலை பட பாடலின் புது புரோமோ இதோ..

தனுஷ் ரசிகர்களே தயாரா..? வாத்தி படத்தின் அதிரடியான ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

தனுஷ் ரசிகர்களே தயாரா..? வாத்தி படத்தின் அதிரடியான ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

ஆட்டநாயகனின் Non Stop ஆட்டம்.. வாரிசு வசூல் அப்டேட் - தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்.. அதிகாரப் பூர்வ அப்டேட் இதோ..
சினிமா

ஆட்டநாயகனின் Non Stop ஆட்டம்.. வாரிசு வசூல் அப்டேட் - தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்.. அதிகாரப் பூர்வ அப்டேட் இதோ..