அட்டகாசமான அப்டேட்டுடன் மீண்டு வந்த விஜய் ஆண்டனி - பிச்சைக்காரான் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

பிச்சைக்காரன் 2 படத்தின் அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி - Vijay antony pichaikkaran 2 sneak peak update | Galatta

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பலபிளாக் பஸ்டர் படங்களுக்கு இசையமைத்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் விஜய் ஆண்டன. இவருக்கே தனித்துவமான துள்ளல் இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 40 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி 'நான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்தார். அதன் பின் அவர் நடித்த பெரும்பாலான படங்களான சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், கோடியில் ஒருவன் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தற்போது விஜய் ஆண்டனி 'அக்னி சிறகுகள்', 'காக்கி', 'மழை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.  மேலும் 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். நடிப்பு, இசை, இயக்கம் மட்டுமல்லாமல் படத்தொகுப்பும் செய்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின் பாடல் பதிவின் போது  கடும் விபத்திற்கு ஆளானார். அதன்படி மூக்கு வாய் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து திரையுலகினர் வருத்தத்திற்கு ஆளானது. விபத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது பெரும்பாலான காயங்கள் ஆறி குணமடைந்து வருவதாக சமீபத்தில் அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்து இயக்கி வரும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு. “money is injures to the world” – “பணம் உலகை காலி பண்ணிடும்” என்று வாசகத்துடன் விஜய் ஆண்டனி இருக்கும் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட காட்சியை முன்னோட்டமாக நாளை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. பெரும் விபத்தையடுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய விஜய் ஆண்டனியை ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.  

Money is Injurious to The World💣💀
பணம் உலகை காலி பண்ணிடும்💣💀
డబ్బు లోకాన్ని ఖాళీ చేస్తుంది💣💀#ANTIBIKILI 👺

1st 4 mins, opening scene of #Pichaikaran2 #Bichagadu2
Sneak Peek Trailer 😈
will release tomorrow at 5PM

Summer 2023🔥@vijaytelevision @StarMaa @DisneyPlusHS pic.twitter.com/n7NrvlKkc9

— vijayantony (@vijayantony) February 9, 2023

விஜய் ஆண்டனி பிலிம்  கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி வரும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய விஜய் ஆண்டனி இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த  திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வைத்துள்ளது. மற்றும் படத்தின் தொலைகாட்சி உரிமத்தை கைப்பற்றியுள்ளது விஜய் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

தெலுங்கில் பேச சொன்ன ரசிகர்கள்.. மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. – வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா வீடியோ வைரல்..
சினிமா

தெலுங்கில் பேச சொன்ன ரசிகர்கள்.. மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. – வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா வீடியோ வைரல்..

“என் அப்பா அம்மா செய்த புண்ணியம்” நடிகர் சூரி நெகிழ்ச்சி – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“என் அப்பா அம்மா செய்த புண்ணியம்” நடிகர் சூரி நெகிழ்ச்சி – வைரலாகும் பதிவு இதோ..

“கண்ணே கண்மணியே” வெளியானது பீட்சா படத்தின் புதிய பாடல் – இணையத்தில் வைரலாகும் பாடல் இதோ..
சினிமா

“கண்ணே கண்மணியே” வெளியானது பீட்சா படத்தின் புதிய பாடல் – இணையத்தில் வைரலாகும் பாடல் இதோ..