வாத்தி பட INTERVAL சீன்ல தனுஷ் சாரோட நடிப்பு... பிரம்மித்த இயக்குனர் வெங்கி அட்லுரி! அட்டகாசமான வீடியோ இதோ

வாத்தி பட INTERVAL காட்சியில் தனுஷ் நடிப்பு குறித்து இயக்குனர் பதில்,venky atluri about dhanush performance in vaathi interval scene | Galatta

ஆகச்சிறந்த நடிகராக படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை முத்திரை பதித்த நடிகர் தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் வாத்தி(SIR).

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில், தேசிய விருது பெற்ற திரைப்பட விமர்சகர் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடன் நேர்காணலில் பேசிய இயக்குனர் வெங்கி அட்லூரி வாத்தி திரைப்படம் குறித்தும் தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் வாத்தி திரைப்படத்தின் INTERVAL காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பை கண்டு பிரம்மித்த நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்டார். “பொதுவாக இது மாதிரியான INTERVAL காட்சியில் கதாநாயகன், வில்லனை பார்த்து ஆக்ரோஷமாக வசனங்கள் பேச வேண்டி இருக்கும். அப்படியான ஒரு காட்சியாக தான் அதில் இருந்தது. அந்த சமயத்தில் தனுஷ் சார் மொத்த காட்சியையும் படித்துவிட்டு, “இதை நான் வேறு மாதிரி முயற்சிக்க வா” என என்னிடம் கேட்டார். நான் உடனே சரி என்று சொன்னேன். அது எப்படி இருக்கும் என அவர் செய்து காட்டுவார் என நினைத்தேன். ஆனால் அவர் அதை டேக்கில் செய்வதாக சொன்னார். நான் அவரிடம் இப்போது எனக்கு செய்து காட்டுங்கள் என கேட்கவும் முடியவில்லை. பின்னர் அந்த காட்சியை படமாக்கும் போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஆக்ரோஷமான அந்த காட்சியை மிகவும் சிம்பிளாகவும் சாதாரணமாகவும் தனுஷ் சார் செய்தது மிகச் சிறப்பாக இருந்தது. மொத்த பிராசஸைய்யும் எளிமையாக்கிவிட்டார். அந்தத் தருணத்தில் நடிப்பு என்பது எவ்வளவு சிம்பிள் என்பதை புரிந்து கொண்டேன். பெரிய கண்கள் கொண்டு புருவம் உயர்த்தி ஏதாவது செய்து நடிக்க வேண்டியதை சாதாரணமாக அவர் பேசி எதிரில் இருக்கும் நபரை பயமுறுத்துகிறார். அவர் அப்படித்தான் செய்தார். இப்போது கூட நாங்கள் எடிட் டேபிளில் உட்கார்ந்து அந்த காட்சியை பார்க்கும் போது இதுகுறித்து பேசினோம். அவருக்கு தெரிகிறது எப்போது உணர்ச்சியை காட்ட வேண்டும் எப்போது விட வேண்டும் எப்போது கோபத்தை காட்ட வேண்டும் என்பதெல்லாம்” என இயக்குனர் வெங்கி அட்லுரி பேசியுள்ளார். இயக்குனர் வெங்கி அட்லுரின் அந்த முழு பேட்டி இதோ…
 

‘சர்வமும் யுவனே..’ பிக்பாஸ் கவினின் Surprise - யுவன் ரசிகர்களால் வைரலாகும் டாடா படக்குழுவினரின் வீடியோ இதோ..
சினிமா

‘சர்வமும் யுவனே..’ பிக்பாஸ் கவினின் Surprise - யுவன் ரசிகர்களால் வைரலாகும் டாடா படக்குழுவினரின் வீடியோ இதோ..

சினிமா

"மீண்டும்.. மீண்டுமா?" தள்ளிப்போன சமந்தாவின் புதிய திரைப்படம்.. - ரசிகர்கள் ஏமாற்றம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

“உன் துணைக்கு நான்தான்..” வாத்தி தனுஷுக்கு வாத்தியாரான இளையராஜா - வைரலாகும் விடுதலை பட பாடலின் புது புரோமோ இதோ..
சினிமா

“உன் துணைக்கு நான்தான்..” வாத்தி தனுஷுக்கு வாத்தியாரான இளையராஜா - வைரலாகும் விடுதலை பட பாடலின் புது புரோமோ இதோ..