அஜித் ரசிகர்களே தயாரா?.. எதிர்பார்த்திருந்த அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்.. - வைரலாகும் அறிவிப்பு இதோ..

துணிவு திரைப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட இசையமைப்பாளர் - Ghibran to release thunivu original background score | Galatta

இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் ‘துணிவு’ அஜித் குமாரின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் திரைப்படம் மக்களின் ஆதரவை பெற்று வரவேற்பை பெற்றது. பொங்கலையொட்டி கடந்த ஜனவரி 11 ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் கோலாகல கொண்டாட்டத்துடன் வெளியாகி உலகளவில் வசூல் குவித்தது. அஜித் குமார் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான முந்தைய திரைப்படங்களை காட்டிலும் துணிவு திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் எச் வினோத் உடன் இணைந்து மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ள இந்த படத்திற்கு துவக்கத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்தது. சமீபத்தில் துணிவு திரைப்படம் பிரபல ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் நேற்று வெளியானது. இதனையடுத்து இணையத்தில் துணிவு திரைப்படம் தொடர்ந்து பேசப்பட்டது.

வெளியாகும் முன்பிலிருந்து வெளியான இன்று வரை இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது துணிவு திரைப்படம். இப்படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்களும் பாடலாசிரியர் வைசாக் எழுதியிருந்தார். மூன்று பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . படத்தில் பாடல்களை தாண்டி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பின்னணி இசை அதிகமாக பேசப்பட்டது. அஜித் படங்களின் பின்னணி இசை பேசப்படுவது வழக்கமானது தான். அந்த வகையில் இந்த படத்திலும் பின்னணி இசை சிறப்பாகவே அமைந்தது. அதன்படி படம் நெட்பிளிக்ஸ் ல் வெளியானதையடுத்து படத்தில் பயன்படுத்திய பின்னணி இசையை கேட்டு நின்றனர் அஜித் ரசிகர்கள். 

இந்நிலையில்  படத்தின் பின்னணி இசை நாளை வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் அந்த அப்டேட்டை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

You guys voted and it's coming tomorrow! #ThunivuOST 🔥 pic.twitter.com/tm71L8Ykid

— Ghibran (@GhibranOfficial) February 9, 2023

பிக்பாஸ் கவின் ‘டாடா’ படத்தின் அட்டகாசமான காட்சியை வெளியிட்ட படக்குழு... கலகலப்பான Glimpse இதோ..
சினிமா

பிக்பாஸ் கவின் ‘டாடா’ படத்தின் அட்டகாசமான காட்சியை வெளியிட்ட படக்குழு... கலகலப்பான Glimpse இதோ..

தெலுங்கில் பேச சொன்ன ரசிகர்கள்.. மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. – வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா வீடியோ வைரல்..
சினிமா

தெலுங்கில் பேச சொன்ன ரசிகர்கள்.. மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. – வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா வீடியோ வைரல்..

“என் அப்பா அம்மா செய்த புண்ணியம்” நடிகர் சூரி நெகிழ்ச்சி – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“என் அப்பா அம்மா செய்த புண்ணியம்” நடிகர் சூரி நெகிழ்ச்சி – வைரலாகும் பதிவு இதோ..