டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று, தமிழ் சினிமாவின் நடிகராக அசத்தி வருபவர் ராகவா லாரன்ஸ்.இவர் ஹீரோவாக நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

இவர் அடுத்ததாக ருத்ரன்,சந்திரமுகி 2,துர்கா உள்ளிட்ட சில முக்கிய படங்களில் அடுத்ததாக நடித்து வருகிறார்.இவர் அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான Trident Arts நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து அவரது தம்பி எல்வின் நடிக்கிறார்.இருவரும் இணைந்து முதல்முறையாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் லான்ச் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.இந்த படத்தினை கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ளார்.இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.