தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மிக குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளவர் மாளவிகா மோஹனன்.மலையாளம்,கன்னடம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார் மாளவிகா மோஹனன்.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாரான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மாளவிகா.

தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாளவிகா மோஹனன்.அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரான மாஸ்டர் படத்தில் நடித்தார்.இந்த படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

இதனை அடுத்து தனுஷ் நடித்த மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் மாளவிகா.இந்த படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் மாளவிகா மோஹனன்.

தற்போது இவர் நடித்துள்ள மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பிரபல பாடகர் Badshah உடன் இணைந்தது இவர் நடித்துள்ள Tauba என்ற இந்த வீடியோ பாடல் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து வருகிறது.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்