90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சமாக திகழ்ந்த ஒரு தொலைக்காட்சி சேனல் என்றால் அது CARTOON NETWORK தான். 1992 warner Bros நிறுவனத்தால் தொடங்கப்பட்ட CARTOON NETWORK நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து எங்கும் உள்ள கோடான கோடி ரசிகர்களை மகிழ்வித்து வந்தது.

குறிப்பாக வளர்ந்த பிறகும் CARTOON NETWORK பார்க்கும் நமது பல 90ஸ் கிட்ஸ்களை இப்போதும் நாம் பார்க்க முடியும். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் வெளியானது CARTOON NETWORK நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தி.

“Dexter’s Laboratory”, “Johnny Bravo”, “Cow and Chicken”, “I Am Weasel”, “The Powerpuff Girls”, “Ed, Edd n Eddy”, “Courage the Cowardly Dog”, “Tom and Jerry”, “Looney tunes”, “Popeye the sailor man”, “Scooby doo”, “The Adams Family”, “The Flinstones”, "BEN 10" உள்ளிட்ட அட்டகாசமான கார்ட்டூன் நிகழ்ச்சிகளை கார்ட்டூன் நெட்வொர்க் இனி நாம் காணப் போவதில்லை.
 
90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத எண்ணற்ற நினைவுகளை கொடுத்து 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்ந்த CARTOON NETWORK தற்போது முற்றிலும் மூடப்படுவதாக வெளிவந்திருக்கும் செய்தி CARTOON NETWORK ரசிகர்கள் அனைவருக்கும் தற்போது மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் OTT தளங்களிலோ தொலைக்காட்சி சேனல்களிலோ புதிதாக எந்த ஒரு கார்ட்டூன் சார்ந்த சேனல்கள், நிகழ்ச்சிகள் வந்தாலும் CARTOON NETWORK மீது ரசிகர்கள் கொண்ட அன்பை பெற முடியுமா என்பது கேள்விக்குறி தான்.