விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இந்த முறை பிக்பாஸில் 20 பணியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

அவர்களில் முதல் ஆளாக, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவரும் முன்னணி யூட்யூபருமான GP.முத்து போட்டியாளராக களமிறங்கினார். ஆரம்பம் முதலே தனது எதார்த்தமான நடவடிக்கைகளாலும் நகைச்சுவையான பேச்சாலும் GP.முத்து  ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 ரன்னர்-அப்பாகவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனராகவும் திகழும் சாண்டி மாஸ்டர் உடன் GP.முத்து இணைந்து கலக்கிய எதுவும் கெடைக்கலன்னா மியூசிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இசை அமைத்து எழுதி பாடியுள்ளார் இசையமைப்பாளர் வைசாக்.

சாண்டி மாஸ்டரின் நடன இயக்கத்தில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்பாடலுக்கு ஜிஞ்சி மாதவன் & கோஜோ இருவரும் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சற்று முன் வெளியான எதுவும் கெடைக்கல்லன்னா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலக்கலான அந்தப் பாடல் இதோ…