தளபதி விஜயின் வாரிசு வெற்றி கொண்டாட்டம்... படக்குழுவுடன் கண்டு ரசித்த முன்னணி பிரபலத்தின் பதிவு! வைரல் புகைப்படங்கள் இதோ

தளபதி விஜயின் வாரிசு படத்தை ரசித்த ராதிகாவின் பதிவு,Radhika sarathkumar enjoyed varisu movie with thalapathy vijay | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக வாரிசு படத்தின் ரிலீசுக்கு பிறகு தளபதி 67 அறிவிப்புகள் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்த 10 நாட்களில் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என அறிவித்த நிலையில் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி தளபதி 67 அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வெளியாகும் எனவும் தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் தமன்.S இசையமைத்துள்ளார். பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக வாரிசு திரைப்படத்தை மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ராதிகா சரத்குமார் தளபதி விஜய், இயக்குனர் வம்சி, ராஷ்மிகா, தயாரிப்பாளர்  தில் ராஜு, சரத்குமார் மற்றும் இசையமைப்பாளர் தமன் உட்பட படக் குழுவினரோடு சேர்ந்து வாரிசு படத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடியதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார் அவர்கள் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#VarisuBlockbuster #TamilCinema #friends a fun evening watching the team bond together with so much of laughter @actorvijay @realsarathkumar @iamRashmika @directorvamshi #dilraju @sangithakrish #shyam @MusicThaman @Lyricist_Vivek #jagdish @samyuktha_shan pic.twitter.com/YF0Jirtp7q

— Radikaa Sarathkumar (@realradikaa) January 25, 2023

கோல்டன் குளோப்-ஐ தொடர்ந்து ஆஸ்கார் விருதை நெருங்கியது SSராஜமௌலியின் RRR! அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் இதோ
சினிமா

கோல்டன் குளோப்-ஐ தொடர்ந்து ஆஸ்கார் விருதை நெருங்கியது SSராஜமௌலியின் RRR! அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் இதோ

அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் காட்சிகள் உருவான விதம்... இதுவரை வெளிவராத பக்கா ACTION PACKED MAKING வீடியோ இதோ!
சினிமா

அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் காட்சிகள் உருவான விதம்... இதுவரை வெளிவராத பக்கா ACTION PACKED MAKING வீடியோ இதோ!

அஜித் குமாரின் துணிவு பட அடுத்த சர்ப்ரைஸ் தயார்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

அஜித் குமாரின் துணிவு பட அடுத்த சர்ப்ரைஸ் தயார்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய அட்டகாசமான அறிவிப்பு இதோ!