சினிமாவை விட்டு போகணுமா? ட்ரோல்கள்-எதிர்மறை விமர்சனங்களால் கோபமடைந்த ராஷ்மிகாவின் பதிலடி! விவரம் உள்ளே

ட்ரோல்கள்-எதிர்மறை விமர்சனங்களால் கோபமடைந்த ராஷ்மிகாவின் பதிலடி,Rashmika mandanna emotional reply to the trolls and negativity | Galatta

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் மிகுந்த பிரபலமடைந்த நடிகை ராஷ்மிகா, கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக களமிறங்கினார். 

முன்னதாக கடந்த 2021ம் ஆண்டில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா-The Rise திரைப்படத்திலும் கதாநாயகியாக ரசிகர்களின் மனதை கவர்ந்த ராஷ்மிகா, சமீபத்தில் வெளிவந்த தளபதி விஜயின் வாரிசு படத்தில் கதாநாயகியாக கலக்கினார். சரியான நடிப்பும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு உள்ளிட்டா பாடல்களில் கச்சிதமாக நடனமும் ஆடி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

அடுத்தடுத்து ஹிந்தியில் அனிமல், மிஷின் மஞ்சு மற்றும் தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். திரைத்துறைக்கு வந்த ஆறு ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் முன்னணி மொழிகளில் 17 திரைப்படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். இதனிடையே தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன் மீது கொட்டப்படும் மோசமான எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் எமோஷனலாகவும் கோபமாகவும் பேசியுள்ளார்

“இங்க நான் என்ன பண்ணாலும் ஒரு சிலருக்கு பிரச்சினையா இருக்கு. என் உடம்பிலும் ரொம்ப பிரச்சினையா இருக்கு, ரொம்ப வொர்க்கவுட் பண்ணா? நான் ஆம்பள மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க. வொர்க் அவுட் பண்ணலன்னா? குண்டா இருக்கேன்னு சொல்றாங்க. நல்லா பேசுனா? க்ரிஞ்சுன்னு சொல்றாங்க. பேசலனா? ATTITUDEன்னு சொல்றாங்க. நான் மூச்சு விட்டாலும் விடலனா கூட இவங்களுக்கு பிரச்சனையா தான் இருக்கும். இப்ப நான் என்னதான் பண்ணனும்னு சொல்றாங்க. சினிமாவை விட்டு போகணுமா? இல்லை இங்கேயே இருக்கணுமா? நான் ஒண்ணுமே பண்ணாம ஏன் என் மேல இவ்வளவு நெகட்டிவிட்டியை காட்றாங்க? சரி இதுவும் நம்ம பாக்குற வேலையில ஒரு பகுதி தான் அப்படின்னு நானே என்னை சமாதானப்படுத்துகிறேன். பொறுத்து பொறுத்து போய்கிட்டு இருக்கேன். ஆனாலும் என்ன கேரக்டர் அசாஸினேட் பண்றாங்க, ஸ்லட்சிங் பண்றாங்க, பாடி ஷேமிங் பண்றாங்க, அதையெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. எதுனாலும் என்ன பத்தி பேசுங்க நான் ஒரு நடிகை ஆனா என்னோட குடும்பத்தை பத்தி பேசாதீங்க அதெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியாது”

என இந்த எதிர்மறை விமர்சனங்களும் ட்ரோல்களும் தன்னை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என ராஷ்மிகா மந்தனா மிகவும் கோபமாக எமோஷனலாகவும் தெரிவித்துள்ளார்.
 

அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் காட்சிகள் உருவான விதம்... இதுவரை வெளிவராத பக்கா ACTION PACKED MAKING வீடியோ இதோ!
சினிமா

அஜித்தின் துணிவு பட ஸ்டண்ட் காட்சிகள் உருவான விதம்... இதுவரை வெளிவராத பக்கா ACTION PACKED MAKING வீடியோ இதோ!

அஜித் குமாரின் துணிவு பட அடுத்த சர்ப்ரைஸ் தயார்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

அஜித் குமாரின் துணிவு பட அடுத்த சர்ப்ரைஸ் தயார்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய அட்டகாசமான அறிவிப்பு இதோ!

நான் உங்களின் அடிமை அல்ல... எதிர்வறை விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலளித்த பிரேமம் பட இயக்குனர்! விவரம் உள்ளே
சினிமா

நான் உங்களின் அடிமை அல்ல... எதிர்வறை விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலளித்த பிரேமம் பட இயக்குனர்! விவரம் உள்ளே