பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகா மோட்வானியின் 50வது திரைப்படமாக விரைவில் ரிலீஸாகவுள்ள திரைப்படம் மஹா.

இயக்குனர் U.R.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாக நடித்திருக்கும் மஹா திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ் படத்திலும் நடித்துள்ளார் ஹன்சிகா.

அடுத்ததாக ஹன்சிகா மோத்வானி தனது புதிய படமாக ரவுடி பேபி படத்தை தொடங்கினார். ரவுடி பேபி திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து மீனா, சத்யராஜ், ராம்கி, சோனியா அகர்வால் மற்றும் லக்ஷ்மி ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

இயக்குனர் J.M.ராஜ சரவணன் எழுதி இயக்கும் ரவுடி பேபி திரைப்படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ்.P.பிள்ளை தயாரிக்கிறார். P.செல்லத்துரை ஒளிப்பதிவில் சாம்.C.S. இசையமைக்க ரவுடி பேபி படத்திற்கான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதுகிறார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட ரவுடி பேபி திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை ராய் லக்ஷ்மி இன்று ஹன்சிகாவின் ரவுடிபேபி படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களோடு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ரவுடி பேபி படப்பிடிப்பில் கலந்துகொண்ட ராய் லக்ஷ்மியின் புகைப்படங்கள் இதோ...