தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் சுந்தர்.சி  பல சூப்பர் ஹிட் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை வழங்கி வருகிறார். குறிப்பாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை சீரிஸ் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

அந்த வகையில் இயக்குனர் சுந்தர்.சி-யின் இயக்கத்தில், நடிகை குஷ்புவின் ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் அரண்மனை-3 படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.

அரண்மனை 3 திரைப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் சுந்தர்.சி, ஆண்ட்ரியா, யோகி பாபு, மனோபாலா, வின்சென்ட் அசோகன், சாக்ஷி அகர்வால் மற்றும் இவருடன் இணைந்து மறைந்த நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் சத்யா.சி இசையமைத்துள்ள அரண்மனை 3 படத்திலிருந்து செங்காந்தளே பாடல் வீடியோ வெளியானது. சி.சத்யா இசையில் கவிஞர் ப.விஜய்யின் பாடல் வரிகளில் , ஆண்ட்ரியாவின் நடிப்பில் உருவான அழகான செங்காந்தளே பாடல் வீடியோ இதோ...