கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் புனித் ராஜ்குமார். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மகனான புனித் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகனாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கன்னட சினிமாவில் புனித் ராஜ்குமாருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யமே உள்ளது.கடைசியாக நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான திரைப்படம் யுவரத்னா. இதனயடுத்து இயக்குனர் சேத்தன் குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜேம்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென இன்று (அக்டோபர் 29) மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் புனித் ராஜ்குமார். மிகவும் மோசமான உடல் நிலையில் ICU-ல் மருத்துவர்கள் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(அக்டோபர் 29) காலை 11.40 மணியளவில் சிகிச்சை பலனின்றி நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்ததார் . அவருக்கு வயது 46.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பல லட்சம் ரசிகர்களின் மனதில் குடியிருக்கும் நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.  நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இந்திய திரையுலகைச் சார்ந்த முன்னணி பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.