தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் நடிகர் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

முன்னதாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் காட்ஃபாதர் படத்தில் நடித்துவரும் சிரஞ்சீவி, அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகும் போலா ஷங்கர் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி இயக்கத்தில் #Chiru155 திரைப்படத்தில் நடிக்க உள்ள மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சலோ மற்றும் பீஷ்மா ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனர் வெங்கி குடுமலா இயக்கும் #Chiru156 புதிய படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆன புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது.  இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் சுகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிரஞ்சீவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ…
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sukumar B (@aryasukku)