விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியாக திகழும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் கடந்த மாத இறுதியில் ஆரம்பமானது பிக்பாஸ் அல்டிமேட். பிக்பாஸ் ரசிகர்கள் 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்காலிகமாக இந்த இடைவெளி எடுத்துள்ளதாகவும் விரைவில் மீண்டும் பிக் பாஸ் தமிழ் 6வது சீசனில் சந்திப்பதாகவும் தெரிவித்து விடைபெற்றார்.

இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் நடிகர் சிலம்பரசன்T.R. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து முக்கிய போட்டியாளரான வனிதா விஜயகுமார் திடீரென வெளியேறியுள்ளார். 3 வாரங்கள் நிறைவடைந்து 4 வது வாரமும் காரசாரமான விவாதங்களோடும் சுவாரசியமான டாஸ்க்குகளோடும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் சக போட்டியாளர்கள் அனைவரும் தனக்கு எதிராக நிற்பதாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ள நடிகை வனிதா விஜயகுமார் மிகுந்த மன அழுத்தத்தின் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக பிக்பாஸ் உடன் பேசி விட்டு வெளியேறும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் வனிதா விஜயகுமார் வெளியேறுவதற்கான இதர காரணங்கள் மற்றும் என்ன நடந்தது என்பதை இன்று(பிப்ரவரி 23) ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனிதா விஜயகுமார் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் ப்ரோமோ வீடியோ இதோ…