தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனக்கென தனி ஸ்டைலில் தொடர்ச்சியாக அட்டகாசமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் இந்த முறை தனது ஸ்டைலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு புதிய பரிமாணத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்களின் தயாரிப்பில், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதையில் தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றான கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன்TR - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 3வது திரைப்படமாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று ஹிட்டடித்துள்ளது.

சிலம்பரசன்.TR உடன் இணைந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். விரைவில் வெந்து தணிந்தது காடு படத்தின் 2ம் பாகமும் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் நேற்று செப்டம்பர் 24ஆம் தேதி கொண்டாடினர். இதில் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள், கதாநாயகன் சிலம்பரசன்.TRக்கு விலையுயர்ந்த டொயோட்டா VELLFIRE காரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கும் பரிசளித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இதோ…
 

Producer Dr @IshariKGanesh gifted a Brand New Luxury Car to #Atman @SilambarasanTR_ & Royal Enfield bike to Director @menongautham for the Huge success of #VendhuThanindhathuKaadu at #VTKSuccessParty@arrahman @VelsFilmIntl @RedGiantMovies_ @Udhaystalin pic.twitter.com/037UU5j4nH

— Vels Film International (@VelsFilmIntl) September 24, 2022