பிரபல நடிகை ஜெயபிரதாவிற்கு 6 மாத சிறை தண்டனை – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.. – விவரம் உள்ளே..

பிரபல நடிகை ஜெயபிரதாவிற்கு 6 மாத சிறை தண்டனை விவரம் உள்ளே - Actress and former mp jaya prada got six moth jail | Galatta

கடந்த 1975 ல் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘மன்மத லீலை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜெய பிரதா.  அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் கொடி கட்டி பறந்தார் நடிகை ஜெயபிரதா. குறிப்பாக தமிழில் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’ ஆகிய படங்கள் ஜெயபிரதாவிற்கு தனி புகழை தேடி தந்தது இறுதியாக தமிழில் கமல் ஹாசனுடன் இணைந்து தசாவதாரம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து திரைத்துறையில் உச்ச பட்ச நடிகைகளில் ஒருவராக மட்டுமல்லாமல் நடிகை ஜெயபிரதா அரசியலிலும் தனி கவனம் பெற்றார். அதன்படி கடந்த 2004 முதல் 2014 வரை உத்திரபிரதேச மாநிலம், ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  

இந்நிலையில் முன்னதாக நடிகை ஜெயபிரதா சென்னை, அண்ணா சாலையில் திரையரங்கம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.  இந்த திரையரங்கிற்கு சொத்து வரி செலுத்தாமல் இருந்ததால் திரையரங்க பொருட்கள் ஜப்தி செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தது என்பது குறிபிட்டதக்கது.  அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதியத்தில் இ எஸ் ஐ பிடிக்கப்பட்டு வந்துள்ளது.  ஆனால் திரையரங்க தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் ஜெயபிரதா செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக குற்றசாட்டு எழ பின் நடிகை ஜெயபிரதா உள்ளிட்ட மூவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுகழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதன்பின் சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கை எதிர்த்து நடிகை ஜெயபிரதா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்பின் சென்னை உயர்நீதி மன்றம் அந்த மேல்முறையீட்டினை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயபிரதா உள்ளிட்ட மூவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து நடிகை மற்றும் அரசியல் பிரமுகரான ஜெயபிரதாவிற்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.