பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாராகும் வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் #தளபதி67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே கோமாளி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது.

முன்னதாக கடந்த 1997ஆம் ஆண்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ், தயாரிப்பாளர் RB.சௌத்ரி தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தின் தலைப்பு, இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இந்த புதிய படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் லவ் டுடே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து சத்யராஜ் ராதிகா யோகி பாபு இவானா ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் லவ் டுடே படத்திற்கு பிரதீப்.E. ராகம் படத்தொகுப்பு செய்கிறார். சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள லவ் டுடே திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

#LoveToday
Thanks to wonderful #Ags ❤️ for this movie.
Dedicating this movie to the girl who left me. @Ags_production #KalpathiSAghoram #KalpathiGanesh #KalpathiSuresh @thisisysr @archanakalpathi @aishkalpathi @venkat_manickam

Wait for it :) pic.twitter.com/hkRZ8DrsXP

— Pradeep Ranganathan (@pradeeponelife) July 3, 2022