தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராகவும் முன்னணி தயாரிப்பாளராகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கலகத் தலைவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் மாமன்னன்.

உதயநிதி ஸ்டாலினுடன் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனர். இதனிடையே தரமான திரைப்படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவி சார்பில் வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அடுத்து வெளியிடும் திரைப்படம் செம்பி.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மைனா கும்கி கயல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா தம்பி ராமையா மற்றும் அஸ்வின் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள செம்பு திரைப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர்.என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான் & ரேயா இணைந்து தயாரித்துள்ளனர்.

M.ஜீவன் ஒளிப்பதிவில், புவன் படத்தொகுப்பு செய்துள்ள செம்பி திரைப்படத்திற்கு நிவாஸ்.K.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30ம் தேதி செம்பி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் செம்பி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

We are extremely happy to announce our association with @prabu_solomon’s #SEMBI, releasing in cinemas near you on Dec 30th!@prabu_solomon @tridentartsoffl @Udhaystalin @i_amak #KovaiSarala @nivaskprasanna @tridentartsoffl @arentertainoffl #AjmalKhan @actressReyaa @teamaimpr pic.twitter.com/x4ZCVS42Ok

— Red Giant Movies (@RedGiantMovies_) November 25, 2022