தமிழ் மற்றும் மலையாளத்தில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் நரேன் தமிழில் இயக்குனர் மிஷினின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். தொடர்ந்து மிஷினின் அஞ்சாதே மற்றும் முகமூடி ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார்.

குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான கைதி திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் பிஜாய் எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த, நரேன் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சாம்பியன் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் திரைப்படத்திலும் பிஜாய் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து கைதி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மஞ்சு ஹரிதாஸ்-ஐ கடந்த 2007 ஆம் ஆண்டு நரேன் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு பெண் குழந்த இருக்கிறது. இந்நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக அழகிய ஆண் குழந்தை தற்போது பிறந்துள்ளது. இதனை நடிகர் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Narain Ram (@narainraam)