மக்களின் மனம் கவர்ந்த நாயகனான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தற்போது கவனம் செலுத்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. 

முன்னதாக ஃபேமிலி மேன் இயக்குனர்கள் இயக்கத்தில் தயாராகியுள்ள FARZI எனும் ஹிந்தி வெப் சீரிஸிலும் நடித்துள்ள விஜய் சேதுபதி, மௌன படமாக தயாராகும் காந்தி டாக்ஸ், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைக்கர், கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

தொடரந்து தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விடுதலை படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தொடர்ந்து சந்திப் கிஷன் நடிப்பில் PAN INDIA படமாக தயாராகி வரும் மைக்கேல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த வரிசையில் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் DSP. 

விஜய் சேதுபதியுடன் இணைந்து அணுக்ரீத்தி வாஸ் கதாநாயகியாக நடிக்க, ஷிவானி நாராயணன் மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் DSP திரைப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் மற்றும் வெங்கடேஷ் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய, D.இமான் இசையமைக்கிறார். 

விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் DSP திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 2ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் DSP படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடியான DSP படத்தின் ட்ரெய்லர் இதோ…