தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. சதுரங்க வேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய H.வினோத் இயக்கத்தில் வெளிவந்த இந்த இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் குமார் - H.வினோத் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் துணிவு.

இதனை அடுத்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முன்னதாக அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது. துணிவு படத்தின் முதல் பாடலை அனிருத் பாடி இருக்கும் நிலையில் அந்த பாடலுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

போனி கபூர் தயாரிப்பிலநீரோஷவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அஜித் குமார் உடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியிடாக ஜனவரியில் துணிவு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமைகளை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் லைகாவுடன் கைகோர்த்துள்ள சரிகம சினிமாஸ் நிறுவனம் துணிவு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

We, @sarigamacinemas, are elated & proud to release the much-awaited Thala #AjithKumar’s #Thunivu in the USA this Pongal 🇺🇸

We are hoping for a blockbuster start to the new year after an eventful 2022. We are thankful to @lycaproductions for trusting our work! #ThunivuPongal pic.twitter.com/MDnSrlvUFV

— Sarigama Cinemas (@sarigamacinemas) November 25, 2022