ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவர இருக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

முன்னதாக நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கும் அஜித்குமார் - போனி கபூர் H.வினோத் - நீரவ் ஷா கூட்டணியில் தயாராகி இருக்கும் துணிவு திரைப்படம், ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியிடாக ஜனவரியில் ரிலீஸாகிறது. அதே பொங்கல் வெளியிடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸாக இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துணிவு திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் துணிவு திரைப்படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடலை அனிருத் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலில் அஜித்தின் மாஸான நடனத்திற்கு தகுந்தாற் போல் இசையமைத்திருப்பதாக சமீபத்தில் இசை அமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடலின் முதல் விமர்சனத்தை பிரபல நடிகர் சிபி புவனச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சில்லா சில்லா பாடலை நேசித்தேன்... உள்ளுக்குள்ள 🔥 மாஸ்!!” என குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளது பாடலின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. சிபி புவனச்சந்திரனின் அந்த பதிவு இதோ…
 

Loved #ChillaChillaSong ❤️

Ullukulla 🔥

Mass 😎 #thala #AjithKumar #Thunivu #ThunivuPongal

— Ciby Bhuvana Chandran (@cibychandran) November 26, 2022