பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.இதனை தொடர்ந்து பிரபாஸ் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான சாஹோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரன வரவேற்பை பெற்றிருந்தது.

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றிருந்தது,கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் மோடில் இருந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை அடுத்து இவர் நடிக்கவுள்ள படம் பிரபாஸ் 21.மகாநதி/நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.வைஜயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கிறார்.இவற்றை தவிர பிரபாஸ் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்திலும் நடிக்கிறார்.

இதனையடுத்து பிரபாஸ் நடிக்கும் பிரபாஸ் 22 படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார்.ஆதிபுருஷ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பிரம்மாண்ட 3டியில் உருவாகவுள்ளது.ராமாயணம் தொடரை மையமாக கொண்ட இந்த பிரம்மாணட படைப்பு இந்தி மற்றும் தெலுங்கில் படமாகிறது. இந்த 3டி கொண்டாட்டம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் சைப் அலி கான் நடிக்கவுள்ளார்.இந்த படம் 2022 ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் மோஷன் கேப்ச்சர் வேலைகள் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குவதாக படத்தின் இயக்குனர் ஓம் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அடுத்தடுத்த அப்டேட்களால் பிரபாஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.