ஹிந்தியில் ஒளிபரப்பாகும்  பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகர் கரண் மெஹ்ரா,பாலிவுட் திரையுலகில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் ஸ்டோரி 2050 ப்லடி இஷ்க் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் 10, கிச்சன் சாம்பியன் 5 போன்ற நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி தொலைக்காட்சிகளில் முன்னணி தொடர்களில் நடிக்கும் பிரபல நடிகையான நிஷா ராவல்,கேசர் ,நச் பலியே 5 என பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நிசார் ராவல் ஹஸ்டே ஹஸ்டே என்ற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு கரண் மெஹ்ரா- நிஷா ராவல்  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

popular hindhi tv serial actress nisha raval husband actor karan mehra arrested

சமீப காலமாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது நடிகர் கரண் மெஹ்ரா, நிஷா ராவலை தாக்கியுள்ளார் என நிஷா ராவல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நடிகர் கரண் மெஹ்ரா தன்னை மிகவும் கடுமையாக தாக்கியதாகவும் தனது தலையை சுவற்றில் இடித்து மிகவும் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். 

நடிகை நிஷா ராவலின் இந்த புகாரின் அடிப்படையில் இதற்கு கரண் மெஹ்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் நடிகை தம்பதிகளான கரண் மெஹ்ரா-நிஷா ராவல் இருவருக்கிடையிலான இந்த சம்பவம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.